கிரிக்கெட்

கேப்டன் டோனிக்கு முழங்காலில் காயம்: அடுத்த போட்டியில் பங்கேற்பாரா...? பயிற்சியாளர் பதில்

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னி அணி 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது காயத்தை திடப்படுத்திக்கொண்டு அணியை தொடர்ந்து வழி நடத்துவார் என நாங்கள் நம்புகிறோம். போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அவர் கொண்டுள்ளார்" என பிளெமிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு அவர் இதனை பகிர்ந்துள்ளார். காயம் காரணமாக தான் டோனியால் சில நகர்வுகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்