லண்டன்,
இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் நியூசிலாந்து அணியை விட கூடுதலாக 9 பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.