கிரிக்கெட்

2 பந்தில் 2 கேட்ச்… ஆனாலும் அவுட் இல்லை - ஐபிஎல்லில் அரிய சம்பவம்

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதின.

மும்பை,

ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடந்த அரிதான சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இப்போட்டியில் முதலில், பேட்டிங் செய்த நடப்பு சாம்பியனான பெங்களூரு (RCB), மும்பை (MI) அணிக்கு 240 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதனை துரத்திய மும்பை அணி கடைசி வரை போராடி18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா ‘ரிட்டயர்டு அவுட்’ஆனதும், பும்ரா தொடர்ந்து 5வது போட்டியிலும் விக்கெட் எடுக்காததும் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையில், மும்பை அணியின் ஷெர்பேன் ரதர்போர்ட் செய்த சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னிங்ஸின் 16வது ஓவரில் ஆர்சிபி பந்துவீச்சாளர் ரசிக் சலாம் காயம் காரணமாக 5 பந்துகள் வீசியபின் வெளியேறினார். மீதமுள்ள பந்தை ரோமாரியோ ஷெப்பர்ட் வீசினார்.

Also read:அரைசதங்களில் செஞ்சுரி... டி20-ல் அரிய சாதனை படைத்த பட்லர்

அந்த பந்தில் ரதர்போர்ட் அடித்த ஷாட்டை ஷெப்பர்ட் தானே கேட்ச் பிடித்தார். ஆனால் அது “நோ பால்” ஆனது. அடுத்த பந்து “பிரீ ஹிட்”. மீண்டும் பெரிய ஷாட் அடித்த ரதர்போர்ட், கேட்ச் ஆனார். ஆனால் பிரீ ஹிட் என்பதால் அவுட் இல்லை. தொடர்ந்து 2 பந்துகளில் 2 முறை கேட்ச் ஆனபோதிலும், அவுட் ஆகாமல் இருந்தது அரிதான சம்பவமாக மாறியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரதர்போர்ட் 31 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.