கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதல்

மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மீதம் உள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. விதிகளின்படி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டும் என்றால், இந்த இலக்கை 6.4 ஓவர்களில் எட்ட வேண்டும்.

இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழப்பது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 15-ந்தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது