சென்னை,
கவுகாத்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்தது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி , ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 128 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜ்ஸ்தான் அணி, 12.1 ஓவர்களில் எளிதாக எட்டியது.
இந்தப் போட்டியில் தோனி பிளேயிங் 11-ல் இடம்பெறவில்லை. அவர் இல்லாத போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது. 2010 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
ஐபிஎல் தொடங்கியதிலிருந்து தோனி, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதற்கு முன்பு 2019 ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதுகுவலி காரணமாகவும், பின்னர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காய்ச்சல் காரணமாகவும் அவர் விளையாடவில்லை. அதற்கு முன்பு 2010-ம் ஆண்டிலும் சில போட்டிகளை தோனி தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 - பஞ்சாப் அணியிடம் தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 - பெங்களூரு அணியிடம் தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 - ஐதராபாத் அணியிடம் தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 - மும்பை அணியிடம் தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் 2026 - ராஜஸ்தான் அணியிடம் தோல்வி