சென்னை,
டோனியுடன் புகைப்படம் எடுக்க அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்களது பிள்ளைகளுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் தனது பேரனுடன் அங்கு வந்துள்ளார். டோனியுடன் செல்பி எடுத்துக் கொள்ள அவர்கள் போட்டாபோட்டியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் டோனிக்கு அதிக அளவில் தொல்லை தர ஆரம்பித்தனர். இதனால் எரிச்சல் அடைந்த டோனி தரப்பில் அணி மேலாளர் ரசூல் மூலம் அங்கு காவலுக்கு இருந்த உயர் பெண் போலீஸ் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. செல்பி என்ற பெயரில் அவருக்கு இத்தகைய இடையூறு செய்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.