கிரிக்கெட்

’யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - சுப்மன் கில்

டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என சுப்மன் கில் கூறினார்.

அகமதாபாத்,

இந்திய கிரிகெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து மவுனம் கலைத்துள்ளார். அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என அவர் கூறினார்.

அவர் பேசுகையில், “கடந்த 3-4 சீசன்களாக ஐபிஎலில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறேன். நான் யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,” என்றார். மேலும், “இந்த முறை ஐபிஎல் கோப்பையை நாங்களே கைப்பற்றுவோம்,” எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

118 ஐபிஎல் போட்டிகளில் 3,866 ரன்கள் குவித்துள்ள கில், 4 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் அடித்துள்ளார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ், இந்த முறை கோப்பையை வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐபிஎல் 2026 சீசனை தொடங்குகிறது.