Image Courtesy: @ICC  
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வீரர்களை அறிவித்தது இங்கிலாந்து

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மூன்று முன்னணி ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர். ரெகான் அகமது, டாம் ஹார்ட்லி, ஜேக் லீச் உள்ளிட்ட மூன்று ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்; ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஓலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெகான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேக் லீச்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு