கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: இலங்கை 2வது இன்னிங்ஸ் 121/7

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை திணறி வருகிறது.

மொகாலி,

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

100வது போட்டியில் விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 4 ரன்களில் சதம் தவற விட்டார். அவர் 96 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. அதில் அஸ்வின் 61 ரன்களில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது.

இதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. அந்த அணியில் நிசாங்கா அரை சதம் (61) எடுத்துள்ளார். அவரை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களிலும், சிலர் 30 ரன்களுக்குள்ளும் சுருண்டனர். இதனால், இலங்கை அணி 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது.

இதனால், 400 ரன்கள் பின்தங்கி இருந்த இலங்கை 2வது இன்னிங்சை விளையாடுகிறது. இந்த போட்டியின் தேநீர் இடைவேளையில் இலங்கை 35 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. அசலன்கா (20), மேத்யூஸ் (28) ரன்கள், லக்மல் (0) எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். 37 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை 121 ரன்கள் எடுத்து உள்ளது. லசித் (0), டிக்வெல்லா (0) விளையாடி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு