கிரிக்கெட்

ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை

நாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மான்செஸ்டர்,

உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முழுவதுமாக சரண் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் வசைபாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இணையதள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த பேட்டியில், வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடவிட்டால், ரசிகர்களிடம் எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

சர்ப்ராஸ் அகமது கூறும் போது, மீதமுள்ள 4 போட்டிகளிலும் இதேபோன்று மோசமாக விளையாடி வந்தால், மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள், மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். யாராவது நான் மட்டும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லப் போகிறேன் என நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம்.

அனைவரும்தான் நாட்டுக்குள் செல்லப் போகிறோம் என்பதை மனதில் வையுங்கள். ஏதோ துரதிருஷ்டமாக நடக்கப்போகிறது என்பதால்தான் கடவுள் சில விஷயங்களை தடுத்துள்ளார். மோசமான விளையாட்டை கைவிட்டு, வெற்றி பெற வேண்டும். இந்தியாவுடன் பெற்ற தோல்வியை மறந்து விட்டு சிறப்பாக ஆட வேண்டும் என்றுதெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்