கிரிக்கெட்

விவியன் ரிச்சர்ட்ஸ்போல அதிரடி… ஜெயவர்தனேபோல ஸ்டைல் - சாம்சனை புகழ்ந்த கவாஸ்கர்

டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடினார்.

சென்னை,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனை பாராட்டினார். சாம்சனின் பேட்டிங்கில் அரிதாகக் காணப்படும் ஒரு சிறப்பம்சம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடினார். ஐந்து இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து பேசிய கவாஸ்கர், டி20 கிரிக்கெட்டில் அரிதாக காணப்படும் கிளாசிக்கல் நுட்பமும் அதிரடி ஆட்டமும் சாம்சனின் பேட்டிங்கில் உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சுக்கு எதிராக சாம்சன் விளையாடிய புல் ஷாட்டுகள், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் அதிரடியை நினைவுபடுத்தியதாக கவாஸ்கர் தெரிவித்தார். அதே நேரத்தில் சாம்சனின் பேட்டிங் பாணி இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனேவை ஒத்திருப்பதாகவும் அவர் கூறினார்.