கிரிக்கெட்

‘டெஸ்ட் போட்டிக்கு திரும்ப முன்னுரிமை அளிப்பேன்’ புவனேஷ்வர்குமார் பேட்டி

கடந்த 2 ஆண்டுகளாக காயத்தில் அடிக்கடி சிக்கி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

புனே,

கடந்த 2 ஆண்டுகளாக காயத்தில் அடிக்கடி சிக்கி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த புவனேஷ்வர்குமார் அடுத்து ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

இந்த நிலையில் 31 வயது புவனேஷ்வர் குமார் நேற்று அளித்த ஒரு பேட்டியில், டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பது தான் எனது முன்னுரிமையாகும். அதனை மனதில் கொண்டு தான் என்னை தயார்படுத்தி வருகிறேன். டெஸ்ட் போட்டிக்கு எந்த மாதிரியான அணி தேர்வு செய்யப்படுகிறது என்பது வேறு விஷயமாகும். அடுத்து நிறைய டெஸ்ட் போட்டிகள் வர இருக்கின்றன என்பதை அறிவேன். அதனை மனதில் வைத்து தான் ஐ.பி.எல். போட்டிக்கான பணிச்சுமையை கையாளுவேன். டெஸ்ட் போட்டிக்கு தயாராக எல்லா வகையிலும் முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு