கிரிக்கெட்

லண்டனில் கங்குலியின் காரை மறித்து இடையூறு செய்த பாகிஸ்தான் ரசிகர்கள்

லண்டனில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் காரை மறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையூறு செய்தனர்.

கார்டிப்,

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பரமவைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் இன்று யுத்தத்தில் இறங்குகின்றன. இதனால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே கிரிக்கெட் ஜுரம் உச்சத்தில் உள்ளதை மறுக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த போட்டியை ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி நிறைவு பெற்றதும் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே கொண்டாடி ஆரவாரம் செய்தனர்.

அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவ்வழியாக காரில் வந்தார். வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கங்குலியை பார்த்ததும், அவரது காரை வழிமறித்து பாகிஸ்தான்,பாகிஸ்தான் என கோஷம் இட்டனர். கார் மீது பாகிஸ்தான் தேசியக்கோடியை வீசி முற்றுகையிட்டனர். பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் அநாகரிமாக நடந்து கொண்டாலும், கங்குலி முகம் சுழிக்காமல் அவர்களை பார்த்து சிரித்தவாரே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு