கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: முழு அட்டவணை வெளியீடு... இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

மொத்தம் 12 அணிகள் இத்தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

சென்னை,

டி20 மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் வரும் ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பெரும் கிரிக்கெட் திருவிழா, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முக்கியத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஜூன் 14ம் தேதி நேருக்கு நேர் மோதவுள்ளன. இப்போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகு, மொத்தம் 12 அணிகள் இத்தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியுடன், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தகுதிச்சுற்று மூலம் தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.

போட்டிக்கான அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் 1:

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து

குரூப் 2:

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து

நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இத்தொடரில் அறிமுகமாக இருப்பது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.