துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்ட பெண்கள் டி20 கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், இந்திய வீராங்கனை ஸ்ரீசரனி மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி, தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மற்றொரு இந்திய நட்சத்திரம் தீப்தி ஷர்மா ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தைப் பெற்றுள்ளார். பாகிஸ்தானின் சாடியா இக்பால் பந்துவீச்சாளர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திற்கும், ஷபாலி வர்மா 2 இடங்கள் சரிந்து 8-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 10-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் 330 ரன்கள் குவித்து தொடர் நாயகி விருது வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட், 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வோல் (815 புள்ளிகள்) மற்றும் பெத் மூனி (788 புள்ளிகள்) முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் நீடிக்கின்றனர்.