கிரிக்கெட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வரும் 26ந்தேதி தொடங்கும்; பி.சி.சி.ஐ. அறிவிப்பு

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 26ந்தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 17ந்தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 8ந்தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

வீரர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் தென் ஆப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வரும் 17ந்தேதி துவங்குவதாக இருந்த டெஸ்ட் போட்டிகள் அதற்கு பதிலாக, வருகிற 26ந்தேதி தொடங்க உள்ளது. இந்த முடிவு, பி.சி.சி.ஐ. அமைப்பின் 90வது வருடாந்திர பொது கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, ஒரு நாள் போட்டி தொடரும் நடைபெறும். எனினும், டி20 போட்டி தொடர் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்