கிரிக்கெட்

இந்தியா - இலங்கை 3-வது டி20 போட்டி: மழை குறுக்கிட வாய்ப்பா..? வெளியான தகவல்

இந்தியா - இலங்கை இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

தினத்தந்தி

பல்லகெலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

பல்லேகேலே மைதானத்தில்தான் இந்த டி20 தொடரின் மூன்று போட்டிகளும் நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் போட்டி முழுமையாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா சேசிங் செய்த போது மழை குறுக்கிட்டது. அதனால், இந்தியாவுக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் என வெற்றி இலக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் போதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. நேற்று மழை பெய்ததாக கூறப்படுகிறது. இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

போட்டி நடைபெறும் நேரத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மழையால் போட்டி தாமதமாகக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு