கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு

பெங்களூரு அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜாக் சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது நாள் போட்டியின் போது பீல்டிங் செய்கையில் காயம் அடைந்ததால் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 19 ஒருநாள் மற்றும் 16 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். வில் ஜாக்கை பெங்களூரு அணி ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்