புது டெல்லி,
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2026 தொடருக்கு மத்தியில், டெல்லி வீரர் சமீர் ரிஸ்வி மற்றும் பிரபல தொகுப்பாளர் ஏஷா சாகர் ஆகியோரைச் சுற்றி எழுந்துள்ள காதல் சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
ஏஷா சாகர் மற்ற வீரர்களுக்குக் கைகுலுக்கக் கூடாது, மதமாற்றம் செய்ய வேண்டும், சமூக வலைதளங்களில் உள்ள சில புகைப்படங்களை நீக்க வேண்டும் என சமீர் ரிஸ்வி கட்டுப்பாடுகள் வித்தித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்தச் சர்ச்சைகள் எல்லை மீறிச் சென்ற நிலையில், ஏஷா சாகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "சமூக வலைதளங்களில் நீங்கள் காண்பதையோ அல்லது வாசிப்பதையோ அப்படியே நம்பிவிடாதீர்கள்," எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தன் மீதும் சமீர் ரிஸ்வி மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறைமுகமாக மறுத்துள்ளார். எனினும், சமீர் ரிஸ்வி தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமீர் ரிஸ்வி, மிகச்சிறந்த பார்மில் உள்ளார். இந்த சீசனில் 7 இன்னிங்ஸ்களில் 209 ரன்களை 149.28 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த அவர், இந்த ஆண்டு டெல்லி அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.