தரம்சாலா,
குவாலிபையர் 1 போட்டியின் இன்னிங்ஸ் இடைவெளியில் நடத்தப்பட்ட லேசர் ஷோவில் , இந்தியாவின் வரைபடம் தவறாக காட்டப்பட்டது சர்ச்சையை எற்படுத்தி இருக்கிறது.
தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. கேப்டன் ரஜத் படிதார் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டம் அந்த அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுத்தந்தது.
அரைகுறை வரைபடம்: மைதானத்தில் அதிர்ச்சி!
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்த லேசர் ஷோவின் போது, இந்தியாவின் வரைபடம் லேசர் விளக்குகளால் பிரதிபலிக்கப்பட்டது.
ஆனால், அந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் (North-East States) பெரும்பாலான பகுதிகள் விடுபட்டிருந்தன. இதை நேரலையில் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்
இந்த தவறான வரைபடத்தின் காட்சிகள், அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகின. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.