பெங்களூரு,
ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல வரலாற்று சாதனைகளைத் தகர்த்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தனது அதிரடியை காட்டிய கோலி, முதல் பவுண்டரியை அடித்த போதே ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார். ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் பேட்டர் என்ற தனித்துவமான சாதனையை விராட் கோலி படைத்தார்.
பவுண்டரிகள் மட்டுமின்றி, சிக்ஸர்களிலும் கோலி மிரட்டினார். நேற்றைய போட்டியில் தனது 300-வது ஐபிஎல் சிக்ஸரை பதிவு செய்ததன் மூலம், இந்த சாதனையை எட்டும் உலகின் 3-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற அதிரடி மன்னர்களின் வரிசையில் கோலி இணைந்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் தொடக்கம் முதல் இன்று வரை ஒரே அணிக்காக (RCB) விளையாடி, இத்தனை சாதனைகளைச் செய்துள்ள ஒரே வீரர் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கோலியின் இந்த வரலாற்று இன்னிங்ஸ் மூலம் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றதோடு, புள்ளிப்பட்டியலிலும் 2-வது இடத்திற்கு முனேறியது.