கிரிக்கெட்

ஐபிஎல் - ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு

சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களம் காணுகிறது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.

சென்னை அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய முடியும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டால் வெளியேறி விடும். இதனால் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களம் காணுகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அன்படி, ஐதராபாத் அணி முதலில் பந்துவீச உள்ளது.