கிரிக்கெட்

ஐபிஎல் - சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா 4 வெற்றி பெற்றுள்ளன.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

4-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா 4 வெற்றி பெற்றுள்ளன.