கிரிக்கெட்

ஐபிஎல் - பெங்களூருக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன.

ஐதராபாத்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐதரபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளநிலையில், டாஸ் தற்போது போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் பந்து வீச உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பெங்களூரு அந்த இடத்தை தக்கவைக்கவும், 3வது இடத்தில் உள்ள ஐதராபாத் புள்ளிப்பட்டியலில் முன்னேறவும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

SCROLL FOR NEXT