கிரிக்கெட்

ஐபிஎல்: 'பச்சை' நிற ஜெர்சியில் பெங்களூரு... டெல்லி கேப்பிட்டல்ஸுடன் இன்று மோதல்

இன்றைய போட்டியில் ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளது.

பெங்களூரு,

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி இந்த சீசனில் மிகச்சிறந்த பார்மில் உள்ளது. இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

டெல்லி அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் சமநிலையில் உள்ளது. பலம் வாய்ந்த பெங்களூருவை அவர்கள் சொந்த மண்ணில் எதிர்கொள்வது ஒரு சவாலான காரியமாகும். டெல்லி அணி வெற்றி பெற வேண்டுமானால், அனைத்து துறைகளிலும் தங்களது உயர்தர ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

Also read:ஐபிஎல்: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சிஎஸ்கே - தடுத்து நிறுத்துமா ஐதராபாத்? - இன்று பலப்பரீட்சை

இதுவரை இவ்விரு அணிகளும் 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பெங்களூரு 20 முறையும் டெல்லி 12 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெங்களூரு வீரர்கள் இன்று வழக்கமான சிவப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தை நீட்டிக்குமா அல்லது டெல்லி அணி அதிர்ச்சி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.