கிரிக்கெட்

ஐபிஎல் - சுனில் நரைன் சாதனை உடைப்பு… புதிய வரலாறு படைத்த பின் ஆலன்

ஐபிஎல்லில் நேற்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதின.

கொல்கத்தா,

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் பின் ஆலன், முதல் ஓவரிலேயே 24 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார்.

ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், 227 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவரை ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் பெய்ன் வீசினார். அந்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்த பின் ஆலன், வெறும் 5 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார்.

மொத்தம் 7 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்து, 2வது ஓவரில் ஹர்ஸ் துபே பந்துவீச்சில் அவுட்டானார்.

இந்த அதிரடியின் மூலம், கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை பின் ஆலன் படைத்துள்ளார். இதற்கு முன், 2018ஆம் ஆண்டு சுனில் நரைன் 21 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்) - 26 ரன்கள்

பின் ஆலன் (கொல்கத்தா) - 24 ரன்கள்

பிரித்வி ஷா (டெல்லி) - 24 ரன்கள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்) - 22 ரன்கள்

சுனில் நரைன் (கொல்கத்தா) - 21 ரன்கள்

நமன் ஓஜா (ராஜஸ்தான்) - 21 ரன்கள்

SCROLL FOR NEXT