கிரிக்கெட்

ஐ.பி.எல்.: பிளே ஆப் சுற்றில் மோதப்போவது யார்? யார்?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சென்னை,

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று ஓய்வு நாளாகும். பிளே-ஆப் சுற்று நாளை தொடங்குகிறது.

இதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் (குவாலிபயர் 1) புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதனை தொடர்ந்து நாளை மறுதினம் (22-ந்தேதி) இதே மைதானத்தில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4-வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன.

24-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும் (குவாலிபயர் 2), 26-ந்தேதி இறுதிப்போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு