கிரிக்கெட்

ஐபிஎல்: 5-வது வெற்றியை பெறுமா சிஎஸ்கே? - டெல்லியுடன் இன்று மோதல்

சென்னை அணி 9 ஆட்டங்களில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்புத் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் சென்னை அணி 9 ஆட்டங்களில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ளன. அதில் சென்னை 20 முறையும், டெல்லி 12 முறையும் வெற்றிபெற்றுள்ளன. ஏற்கனவே இந்த சீசனில் டெல்லிக்கு எதிரான முதல் மோதலில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 7.30 தொடங்கும் இந்த ஆட்டத்தில் 5-வது வெற்றியைப் பெற்று பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.