கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதி வருகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் அதிரடி காட்டினார். அவர் 37 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவும், ஓரளவுக்கு ரன்கள் எடுத்தாலும், அதிரடி காட்ட தவறினர். திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா, தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி அடிக்க ஆசைப்பட்டு கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.
இறுதியில் சிவம் துபே சில பவுண்டர்கள் விரட்ட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.