

கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
ஆட்டம் நடைபெற இன்னும் 2 மணிநேரம் உள்ள நிலையில் ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். 35 ஆயிரம் இருக்கைகளை கொண்ட பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட் ஏற்கனவே முழுமையாக விற்றுத்தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.