கிரிக்கெட்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகள்; கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தொடங்கி வைக்கிறார்

கேரளாவில் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகளை கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தொடங்கி வைக்கிறார்.

கொச்சி,

கேரளாவில் வருகிற 20ந்தேதி இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் கால்பந்து போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டியை சமீபத்தில் பி.சி.சி.ஐ. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி தொடங்கி வைக்கிறார்.

இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வருகிற 19ந்தேதி ராஞ்சி நகரில் தொடங்கி 23ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக கங்குலி, அங்கு செல்லவும், இந்திய வீரர்களுடன் நேரம் செலவிடவும் ஆர்வமுடன் இருந்துள்ளார். ஆனால் கேரள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் செல்ல வேண்டிய நிலையில் கங்குலியின் ராஞ்சி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி கூறிய கங்குலி, ராஞ்சி செல்ல விரும்பினேன். ஆனால் அதற்கான நேரம் இல்லை. இந்தியன் சூப்பர் லீக் போட்டி விழாவை தொடங்கி வைக்க வேண்டி உள்ளது. அதனால் கேரளாவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ. வாரிய தலைமையகத்தில் வருகிற 23ந்தேதி தலைவராக அதிகாரப்பூர்வ முறைப்படி கங்குலி பொறுப்பேற்று கொள்கிறார். இதற்காக அவர் கொச்சியில் இருந்து மும்பைக்கு செல்வார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்