கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லபுஸ்சேனுக்கு இடமில்லை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதம் வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான 23 பேர் கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து இந்த மாத கடைசியில் இறுதி அணி முடிவு செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறாத ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். 26 வயது பேட்டிங் ஆல்-ரவுண்டரான மார்னஸ் லபுஸ்சேன் பெயர் அணியில் இடம் பெறவில்லை. இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் விளையாடி வரும் லபுஸ்சேன் பயண கட்டுப்பாடு காரணமாக நாடு திரும்புவதில் சிக்கல் இருப்பதால் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு