கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. கடந்த மாதம் அங்கு சென்ற இந்திய அணி தென்ஆப்பிரிக்காவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.
ஆனால் யார் கண்பட்டதோ அதன் பிறகு எல்லாமே இந்தியாவுக்கு சோக மயம் தான். அடுத்த இரு டெஸ்டுகளில் தோல்வி, டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இருந்து விராட் கோலி விலகல், அதைத் தொடர்ந்து முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் தோல்வி என்று தொடர்ச்சியாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற
முன்னதாக முதல் இரு ஆட்டங்கள் நடந்த பார்ல் ஆடுகளம் மெதுவானதன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் இந்த போட்டி நடக்கும் கேப்டவுன் ஓரளவு வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை பறிகொடுத்து விட்ட நிலையில் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா இங்கு 37 ஆட்டங்களில் ஆடி 31-ல் வெற்றிகளை குவித்து இருக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:-
இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், , தீபக் சாஹர், பும்ரா, பிரசித் கிருஷ்ணா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், பிரிட்டோரியஸ், சிபாண்டா மஹேலா, நிகிடி.