கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பிரித்வி ஷா விலகினார்.

தினத்தந்தி

மும்பை,

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கணுக்காலில் காயம் அடைந்த தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவரது காயம் குணமடையாததால் எஞ்சிய 2 டெஸ்ட் போட்டியில் இருந்தும் அவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது காயம் அடைந்து சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் களம் கண்டு 73 ரன்கள் எடுத்ததுடன், 7 விக்கெட்டும் வீழ்த்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்று அணியினருடன் இணைய உள்ளனர். இந்த தகவல் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு