மும்பை,
ஐபிஎல் 2026 தொடரில் பின்னடைவைச் சந்தித்து வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணிக்கு ஒரு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்ப கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) அனுமதி வழங்கியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் நடுப்பகுதியில் தடுமாறி வரும் டெல்லி அணிக்கு, ஸ்டார்க்கின் வருகை மிக முக்கியமானது. கடைசி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த டெல்லி திணறி வரும் நிலையில், ஸ்டார்க்கின் யார்க்கர்கள் அணிக்கு கைகொடுக்கும்.
கடந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஸ்டார்க் அண்மையில் முடிந்த ஆஷஸ் தொடரில் 'தொடர் நாயகன்' விருது வென்ற அதே பார்முடன் தற்போது களமிறங்க உள்ளார். வரும் மே 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.