கிரிக்கெட்

மொயின் அலி அதிரடி அரைசதம் - மறுமுனையில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கும் சென்னை வீரர்கள்..!!

டிரென்ட் போல்ட்- யின் ஒரே ஓவரில் மொயின் அலி 26 ரன்கள் குவித்தார்.

மும்பை,

மும்பை, ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெற்று வரும் 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெவோன் கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கான்வே ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் அவர் ஒரு சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அந்த டிரென்ட் போல்ட்- யின் ஒரே ஓவரில் மொயின் அலி 26 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ராயுடு, ஜெகதீசன் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

தற்போது வரை சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்