ராஞ்சி,
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தன்னைப்பற்றி எழுப்படும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு எப்போதும் தனது மவுனத்தை மட்டுமே பதில் அளிப்பார். ஆனால், இந்த முறை தனது நண்பரும் சக வீரருமான ரெய்னாவின் விமர்சனத்துக்கு டோனி காரசாரமாக பதிலளித்துள்ளார்.
இந்திய அணியில் இருந்து சமீப காலமாக ஓரங்கட்டப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா, கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், தோனி என்ன நினைக்கிறார், எண்ணுகிறார் என்பதைக் கணிப்பது கடினம், அவர் கண்கள் ஒன்றையும் வெளிப்படுத்தாது, நாம் சில வேளைகளில், கொஞ்சம் உணர்ச்சியைத்தான் காட்டேன் என்று கூற வேண்டும் போல் தோன்றும். அவர் நிறைய முறை கோபமடைந்துள்ளார். ஆனால் கேமராவில் நீங்கள் பார்க்க முடியாது. கேமரா எப்போது ஆனில் இல்லை என்று அவருக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
ரெய்னாவின் இந்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ள டோனி, நாம் மகிழ்ச்சியாக இருக்க பல்வேறு இடங்கள் இருக்கிறது. ஆடுகளத்துக்குள் இறங்கிவிட்டால், அதில் நான் கவனமாக இருப்பேன். அங்கு நகைச்சுவையாக பேசமாட்டேன். ஆனால் டிரெஸ்சிங் அறையில் ஜாலியாக இருப்பேன். இதுதான் உண்மை இவ்வாறு அவர் தெரிவித்தார்.