கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வங்காளதேச டெஸ்ட் தொடர் தள்ளிவைப்பு

வங்காளதேச கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சம்மதத்துடன் இந்த போட்டி தொடரை காலவரையின்றி தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. நியூசிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் வந்து விட்டது. ஆனால் வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை.

சமீபத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா உள்பட 3 வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நடத்தினால் பாதுகாப்பானதாக இருக்காது என்பதை உணர்ந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சம்மதத்துடன் இந்த போட்டி தொடரை காலவரையின்றி தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்