கிரிக்கெட்

ஐபிஎல் - ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

இப்போட்டியில் முதலில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்கிறது.

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கு அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று(திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Also read:ஐபிஎல்: ‘அரைசதம் ஓகே… ஆனால் கோலி திருப்தியில்லை’ - ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

ஐதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 65 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும் பணிந்தது.