கிரிக்கெட்

ஆர்சிபிக்கு எதிராக... நேருக்கு நேரில் முன்னிலை வகிக்கும் சிஎஸ்கே - தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 35 போட்டிகளில் மோதியுள்ளன.

பெங்களூரு,

ஐபிஎல் 2026 தொடரில், தங்களின் முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிகரமாக துவங்கிய பெங்களூரு அணி, தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இன்று சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இந்த நட்சத்திர அணிகள் மோதும் ஆட்டம், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆர்சிபி தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தநிலையில், அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

இதற்கிடையில், காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ், இந்த போட்டியில் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 35 போட்டிகள் விளையாடியநிலையில், அதில் 21 வெற்றிகளை சிஎஸ்கே பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆர்சிபி 13 போட்டிகளில் வென்றுள்ளது.

இந்நிலையில், வெற்றியைத் தொடர ஆர்சிபி முயற்சி செய்தாலும், தொடர் தோல்வியை முறியடிக்க , சிஎஸ்கே கடும் போராட்டம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி:

ஆர்சிபி

விராட் கோலி

பிலிப் சால்ட்

ரஜத் பட்டிதார் (கேப்டன்)

ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்)

டிம் டேவிட்

ரோமாரியோ ஷெப்பர்ட்

க்ருனால் பாண்ட்யா

புவனேஷ்வர் குமார்

அபிநந்தன் சிங்

ஜேக்கப் டப்பி

சுயாஷ் சர்மா

இம்பாக்ட் பிளேயர்ஸ்

தேவ்தத் படிக்கல்

ஜேக்கப் பெத்தெல்

ரசிக் சலாம் தார்

கனிஷ்க் சௌஹான்

வெங்கடேஷ் ஐயர்

சிஎஸ்கே

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்)

ஆயுஷ் மாத்ரே

டெவால்ட் பிரேவிஸ்

சர்பராஸ் கான்

சிவம் துபே

ஜேமி ஓவர்டன்

நூர் அகமது

அன்ஷுல் காம்போஜ்

மேட் ஹென்றி

கலீல் அகமது

இம்பாக்ட் பிளேயர்ஸ்

கார்த்திக் சர்மா

பிரஷாந்த் வீர்

ராகுல் சஹர்

ராமகிருஷ்ணா கோஷ்

குர்ஜப்நீத் சிங்