கிரிக்கெட்

ஐபிஎல்: அதிவேக 1000 ரன்கள் - டிராவிஸ் ஹெட்டின் சாதனையை முறியடித்த ஆர்சிபி வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

மும்பை:

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த அவர், ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

டிம் டேவிட் வெறும் 560 பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து, தனது சக நாட்டு வீரரான டிராவிஸ் ஹெட்டின் சாதனையை (575 பந்துகள்) முறியடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்தவர்கள் (எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில்):

வீரர்கள் எதிர்கொண்ட பந்துகள்

ஆண்ட்ரே ரசல் 545

டிம் டேவிட் 560

டிராவிஸ் ஹெட் 575

பில் சால்ட் 575

ஹென்ரிச் கிளாசன் 594

வீரேந்தர் சேவாக் 604

இந்த சீசனில் சிறந்த பார்மில் இருக்கும் டிம் டேவிட், டெல்லிக்கு எதிரான போட்டியில் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அதிரடியாகத் தொடங்கினார். இருப்பினும், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேலின் சுழலில் சிக்கி நடராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட் 63 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால், நட்சத்திர வீரர் விராட் கோலி சீக்கிரமாகவே ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியதால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

SCROLL FOR NEXT