கிரிக்கெட்

மும்பை அணியில் 15 ஆண்டுகள்... ரோகித்தின் புதிய மைல்கல்

ரோகித், 2011-ம் ஆண்டு மும்பை அணியில் இணைந்தார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா, மும்பை அணியுடன் தனது 15 ஆண்டுகால பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளார்.

2008 முதல் 2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோகித், 2011-ம் ஆண்டு மும்பை அணியில் இணைந்தார். அதே ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பைக்காக தனது முதல் ஆட்டத்தை விளையாடினார்.

அதன் பின்னர் தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோகித், 230க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி சுமார் 6,000 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் திகழ்கிறார். மேலும், அந்த அணிக்காக அதிக சதங்கள் அடித்த சாதனையும் அவரிடம் உள்ளது.

கேப்டனாக, ரோகித் சர்மா மும்பை அணியை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.