கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுகிறார் சாம் கர்ரன்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் காயம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகுகிறார்.

தினத்தந்தி

துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் இடம் பெற்றிருந்தார் .

தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவருக்கு, கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த சென்னை- ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சாம் கர்ரன் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக டாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு