கிரிக்கெட்

சென்னையில் மோதும் இந்தியா-ஆப்கானிஸ்தான்...டெஸ்ட், ஓடிஐ தொடர் அட்டவணை வெளியீடு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

சென்னை,

டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வரும் ஜூனில் இந்தியா வருகிறது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 6ம் தேதி டெஸ்ட் போட்டியிலும் 14, 17, 20ம் தேதிகளில் ஓடிஐ போட்டிகளிலும் இந்தியா மாற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ஜூன் 20ம் தேதி 3வது ஓடிஐ போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரை நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும். ஓடிஐ தொடர் ஜூன் 14-ம் தேதி தரம்சாலாவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓடிஐ போட்டிகள் ஜூன் 17 மற்றும் 20-ல் லக்னோ மற்றும் சென்னையிலும் நடைபெறும். அனைத்து ஓடிஐ போட்டிகளும் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். கோலி மற்றும் ரோகித் இந்தத் தொடரின் மூலம் அணிக்கு திரும்புகின்றனர்.