கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் சதம்...வரலாறு படைத்த வீராங்கனை

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவரும் இவர்தான்.

தினத்தந்தி

சென்னை,

மகளிர் பிரீமியர் லீக்-ல் சதமடித்த முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மும்பை வீராங்கனை ஸ்கைவர்-பிரண்ட் ஆர்சிபி-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 57 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனில் 16 வது போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இதில், சஜனா 07 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மேத்யூஸ் உடன் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

இங்கிலாந்து வீராங்கனையான இவர், 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், முன்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவரும் இவர்தான்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்