கிரிக்கெட்

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கில் - சாய் சுதர்சன் ஜோடி

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 100 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அகமதாபாத்,

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியின் தொடக்கம் முதலே சென்னை பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மேலும் ஒரு 100 ரன்களுக்கும் மேலான தொடக்க பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தது.

இதன் மூலம், கில் - சாய் சுதர்சன் ஜோடி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 100 ரன்களுக்கு மேல் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த ஜோடி இதுவரை 7 முறை 100 ரன்களுக்கும் மேற்பட்ட தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளது.

முன்னதாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி மற்றும் ஷிகர் தவான் - டேவிட் வார்னர் ஜோடி ஆகியோர் தலா 6 முறை 100 ரன்களுக்கு மேல் தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்து சாதனை படைத்திருந்தனர்.

அந்த சாதனையை தற்போது கில் - சாய் சுதர்சன் ஜோடி முறியடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 100 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.