கிரிக்கெட்

தொடர்ந்து அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷி... சமாளிக்குமா ஐதராபாத்?

இன்று ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

ஐபிஎல் 2026 தொடரில் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்சி தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். சென்னை அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம், பெங்களூரு அணிக்கு எதிராக 26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.

மேலும், முந்தைய ஆட்டங்களில் பும்ரா, புவனேஷ்வர், ஹேசல்வுட் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களைவும் சுலபமாக சமாளித்தார்.

Also read:சாம்பியனுக்கு ரூ.19.42 கோடி…மகளிர் டி20 உலகக் கோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு

இந்நிலையில், இன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணியின் ஜெயதேவ் உனாட்கட், சிவம் மாவி, இஷான் மலிங்கா ஆகிய பந்துவீச்சாளர்களால் வைபவ் சூர்யவன்ஷியை தடுக்க முடியுமா என்பது தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.