கல்லே,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பதுன் நிஷாங்காவும், கேப்டன் கருணரத்னேவும் களமிறங்கினர். நிஷாங்கா சிறப்பாக விளைவாடி அரைசதம் எடுத்தார். அவர் 56 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இன்றைய நாளின் கடைசிவரை நின்று ஆடிய அவர் 265 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 132 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் ஜோடி சேர்ந்த டி சில்வா 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். போட்டியின் முதல்நாள் முடிவில் இலங்கை அணி 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.