Image Courtesy: @ICC 
கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும்.

எனவே இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான மார்கோ யான்செனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெட்டிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரின்னே.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு