கிரிக்கெட்

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

* சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் நேற்றைய லீக் ஆட்டங்களில் பஞ்சாப் சிந்து வங்கி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 4-1 என்ற கோல் கணக்கில் ராணுவம் அணியையும் சாய்த்தது.

* இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால் முன்னிலை பெற இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும். பவுன்சர் பந்து தாக்கியதால் 3-வது டெஸ்டில் ஆடாத ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்புகிறார். இதனால் உஸ்மான் கவாஜா கழற்றி விடப்பட்டுள்ளார். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்